விலங்கியல் மனித சுவாசம் கேள்வி பதில்கள் -1 Get link Facebook X Pinterest Email Other Apps - July 05, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps
தமிழ் வலைவழி - தேர்வு - பனிரெண்டாம் வகுப்பு - தொகுப்பு - 1 Get link Facebook X Pinterest Email Other Apps - August 01, 2021 தமிழ் வலை வழித்தேர்வு - பனிரெண்டாம் வகுப்பு பிரிவு அ-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் வினாத்தாள் ஆக்கம்: - திரு. Dr.P.இரத்தினசபாபதி Phd.,-கணக்கப்பிள்ளைவலசை 1. தமிழின் நிலை குறித்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். “கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர் பொதிகை செந்தமிழே சீறி வா வா’ என்று கூறுகிறார், இதில் கூண்டு குறிப்பது எதனை?  மொழியின் செறிவான இலக்கணக் கட்டுப்பாடு  தமிழ்மொழிக்குப் பிறரால் ஏற்பட்ட அழுத்தம்  இலக்கிய வளாச்சியின் தேவை  மொழியின் தோற்றம் 2.மண் + அகல் : மெய்முன் உயிர் = கிளி + மூக்கு : ......................  உயிர் முன் மெய்  உயிர் முன் உயிர்  மெய் முன் மெய்  நெடில் முன் குறில் 3) பண்பு அடிப்படையில் மாறுப்பட்ட சொல் ............?  பசுமை  இனிமை  வெண்மை  கருமை 4) சொற்பொருளைப் புரிந்துகொள்வதற்காகக் கீழுள்ள பாடல் வரி நான்கு வகையாக எழுதப்பட்டுள்ளது. அவற்றுள் எது சரியானது ? பாடல் வரி “ கன்னெலெ னத்தரும் இன்னமு தந்தமிழ்” ?  கன் அலே எனத் தருமின் அமுது முத்தமிழ்  கன்னல் எனத் தரும்இன் அமுதத் தமிழ்  கன்னலே எனத் தரும் இன்னது முத்தமிழ்  கன்னலென தரும் இன்னமுதுத் தமிழ் 5)“தண்ணீர்”- இத் தொடரில் ஏற்பட்ட புணர்ச்சி மாற்றம்?  வருமொழி நீண்டு இனமெய் சேர்ந்தது  நிலைமொழி ஈற்றால் மெய் திரிந்தது  நிலைமொழி ஈறு கெட்டு வருமொழி திரிந்தது  மாற்றம் இல்லை 6)“அந்த இடத்தைத் தவிர வேறு இடத்தில் கதை சொல்லப்பட்டாலும் அதற்கு நான் எதிர்பார்க்கிற அழுத்தம் கிடைக்காது” - .இந்த வாக்கியத்தின் எழுவாய் எது?  அந்த  கதை  அழுத்தம்  நான் 7)உடம்படுமெய் பெற்ற தொடர் எது?  பூவுதிர்ந்தது  அம்மெய்தான்  வலைவீசு  தெய்வயானை 8) தொடர் அதற்குரிய வேற்றுமைத் தொகையொடு பொருத்தப்பட்டிருக்கிறது, தவறாகப் பொருத்தப்பட்டிருப்பது எது?  கலை கற்றான்-2  தலை வணங்கினான்-3  உலை அரிசி-4  விலை வீழ்ந்தது- 5 9) தன்வினைக்கு மட்டும் உரிய வினை எது?  கனை  வளை  கலை  தொலை 10) புணர்ச்சியால் இரண்டு மாற்றங்கள் பெற்ற தொடர் எது?  தனியாழி  ஆங்கவற்றுள்  தண்டியலங்காரம்  கருங்கோழி 11)ஒரு தொகுதியினதாகக் கருதப்படும் சொற்கள்  நிலவு,கலை,ஞாயிறு  குடில்,கூரை,வரைப்பு  தாயம்,சங்கம்,குடும்பம்  கிளை,மலர்,சுற்றம் 12)பொருள் மயக்கம் தராத வாக்கியம் எது?  இன்று முதல் பாடம் கற்போம்  எம் மொழி யார்க்கும் எளிது  யார்க்கும் எம்மொழி எளிது  எளிது எம் மொழி யார்க்கும் 13)பெயரெச்சமும் வினையெச்சமும் அமைந்துள்ள அடி ?  கண்ட காட்சியெல்லாம் களிப்பூட்டிய காட்சி  வெந்து தணிந்த காட்டில் விளைந்தது எது?  மகிழ்ந்தாரைக் கண்டேன். கண்ணடாரும் மகிழ்ந்தனர்  விளைக வயலே, வருக இரவலர் 14)‘பக்தி” என்னும் சொல் தமிழ்ச்சொல்லன்று. ஏனெனில். தமிழ்மொழி அமைப்பில் .................வராது  ‘ப’ வை அடுத்து ‘க்’  ‘க்”ஐ அடுத்து ‘த்’  மூன்றெழுத்துச் சொல்லின் மெய்  சொல் இறுதியில் "இ” 15)பன்மைப் பொருளை உணர்த்தும் உருபு ஒருமைப் பொருளைப் பொருளுக்கும் மாறிவந்தமைக்க எடுத்துக்காட்டு  நேற்று வந்தவர் இவர்  மக்களில் சிறந்தவன் இவன்   அவர்கள் வந்தார்கள்   தங்கமும் மணியும் பாடினார்கள் 16)பாரதியார் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்  மாயூம் வேதநாயகம்  வடலூர் வள்ளலார்  நாமக்கல் கவிஞர்  உ.வே.சா Name: Class: R.No : மாணவர்கள் submit செய்தவுடன் சிறிது நேரம் அமைதியாக காத்திருக்கவும். பதில்கள் பதிவு செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்படும் மாணவர்கள் submit இரண்டாம் முறையாக முயற்சித்தால் தாங்களின் கடைசி பதில் மிகச்சிறந்த பதிலாக கருத்தில் கொள்ளப்படும்..       Get link Facebook X Pinterest Email Other Apps Comments Popular posts from this blog ready to learn back to school - மாணவர்களுக்கான பாடம் - 1 - January 19, 2025 Read more Happy New Year 2025 🎂 - December 27, 2024 Read more மூதுரை - മൂതുരൈ - ಮೂತುರೈ - March 11, 2025 Read more