Click here to View
எங்கள் பாரதி - பத்தாம் வகுப்பு
- Get link
- X
- Other Apps
பாடச்சுருக்கம்.
படித்துச் சுவைக்க : சர்க்கரைப் பொங்கல் : இளஞ்சிவப்பாக வறுத்த, பாதி உடைத்த பருப்பும் பச்சை அரிசியும் பானையில் கொப்புளமிட்டு கொதிக்க, மென் துணியில் வடிகட்டிய வெல்ல க் கரைசல் நார்ப்பாகு பதத்தில் வெந்த பொங்கலுடன் கலக்கின்றது. உலர்ந்த திராட்சைகள் பசு நெய்யில் தங்கமென ஊதி உருண்டு வர, பிறை போன்ற முந்திரிப் பருப்புகள் அதனுள் சேர்ந்து மின்னுகின்றன. காற்றெங்கும் பால் கலந்த இனிப்பின் வாசம் இனி, இடித்த ஏலக்காய் தூவ, எல்லாமும் பொங்கலுடன் இணைந்து குழைய, இந்தச் சர்க்கரை பொங்கலின் தித்திப்பு திகட்டாது. நறுக்கிய ஈர வாழையிலையில் ஒரு அகப்பை சுடும் பொங்கலிட அது விழுந்தெழுப்பும் மணம், அறுவடையின் மகிழ்வு அது! சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உந்தும் உத (திருக்கு1031).
பழையசோறு : பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்த வள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை , அதன் வழவழப்பை , கடுப்பு மணத்தை , சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும்.
விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை.
வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டா ல், வடுமாங்கா ய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்!
நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம்.
பழைய சோறு- அது கிராமத்து உன்னதம். “ மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" ……முக்கூடற்பள்ளு
திணைவழுவமைதி : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்தியக் கொள்ளபட்டது.
பால் வழுவமைதி : “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது
பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
இட வழுவமைதி : மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,“இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் ” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
கால வழுவமைதி : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும்.
அவ்வாறு அமையவில்லை என்றா லும் நாம் பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
மரபு வழுவமைதி : “கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்”- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில்
கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக்
கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு
வழுவமைதிய ஏற்றுக் கொள்ளபட்டது.
“தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?” - “கேரட்”
“பிடிச்ச பழம்?” - “ஆப்பிள்”
பிடிச்ச காலை உணவு? - “நூடுல்ஸ்”“
மத்தியானத்துக்கு” - “ஃப்ரை டு ரைஸ்”“
ராத்திரி…?” - “பீட்ஸா அல்லது பாஸ்தா ”
இது ஏதோ ஆங்கிலப்ப டத்தின் வசனம் அல்ல.
“ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்” என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி?
இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், ‘ஆம், காணாமல் போய்விடும்'! உங்கள் குழந்தை கள், “ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!
மருத்துவர் கு.சிவராமனின் இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
108. கயமை
1) மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.
2). நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்;
நெஞ்சத்து அவலம் இலர்.
3. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
5. அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.
6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.
7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
8. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
9. உடுப்ப தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
10. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
45. பெரியாரைத் துணைக்கோடல்
1. அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
2. உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
4. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
5. சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
6. தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
7. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
9. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
10. பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
14. ஒழுக்கம் உடைமை
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் அவ்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்: ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பை தருவதோல்
அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக பேணிக் காக்க வேண்டும்.
2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.
3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
36. மெய் உணர்தல்
1. பொருள்அல் லவற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
3. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு.
5. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
6. கற்றுஈண்டு மெய்ப்பொ ருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.
7. ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.
8. பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
9. சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
10. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
56. கொடுங்கோன்மை
1. கொலைமேற்கொண் டாரின்கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய் துஒழுகும் வேந்து.
2. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
4. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
7. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு.
8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.
9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் கவான் எனின்.
87. பகை மாட்சி
1. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
2. அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
3. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
4. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது.
6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை.
8. குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து.
9. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
101. நன்றிஇல் செல்வம்
1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
2. பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
4. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
5. கொடுப்ப தூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
6. ஏதம் பெ ருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்.
7. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
8. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
9. அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறம்கூர்ந்து அனையது உடைத்து.
83. கூடா நட்பு
1. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
2. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.
4. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
5. மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறல்பாற்று அன்று.
6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
8. தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லல் பாற்று.
10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில்
குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்ப ட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.
* வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்;
அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும்
விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோ டு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
சார்பெழுத்து : உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை , ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் , மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய இரண்டு அளபெடைகள் குறித்து இங்குக் காண்போம். அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல். பேச்சு வழக்கில் சொற்களை நீட் டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது. எ. கா. அம்மாஅ, தம்பீஇ
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Unit I-கோடிட்ட இடங்களை நிரப்பு
1) . . . . . . . . . . . மலர்கள் தரையில் நழுவும் எப்போது?
அள்ளி முகர்ந்தால், தளரப் பிணைத்தால் . இறுக்கி முடிச்சிட்டால் , காம்பு முறிந்தால்
தளரப் பிணைத்தால் ✓
தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்
2) தேங்காயிலிருந்தது எண்ணெய் எடுத்த பிறகு மிஞ்சும் பொருளை குறிக்கும் சரியான சொல்.
கசடு, பிண்ணாக்கு, சருகு , சண்டு
பிண்ணாக்கு ✓
தேங்காயிலிருந்தது எண்ணெய் எடுத்த பிறகு மிஞ்சும் பொருளை குறிக்கும் சரியான சொல்பிண்ணாக்கு
3) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது.?
கூவிளம் தேமா மலர் , கூவிளம் புளிமா நாள், தேமா புளிமா காசு , புளிமா தேமா காசு
கூவிளம் தேமா மலர் ✓
எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு கூவிளம் தேமா மலர்
4) பின்வருவனவற்றுள் முறையான தொடர் . . . . . . . . . . . . .
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு,
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு,
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு,
ஈ) தமிழர் வாழை பண்பா ட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு, ✓
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு முறையான தொடர்
5) "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது . . . . . . . . . . . . . . . . . .
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
சிற்றூர் ✓
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது சிற்றூர்
6) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்காரணமாக அமைவது –
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
அ) வேற்றுமை உருபு ✓ ️
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்காரணமாக அமைவது வேற்றுமை உருபு
7) 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்ட தால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தா ன் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து
போற்றிய நிலை –
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
இன்மையிலும் விருந்து ✓ ️
'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்ட தால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை இன்மையிலும் விருந்து
8) "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ) உவமை, எதுகை
மோனை, எதுகை ✓ ️
"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? மோனை, எதுகை
9) நிரல்நிறை அணி நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
எ.கா. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. -குறள்: 45
நிரல் நிறை அணி எனப்படும். ✓ ️
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. -குறள்: 45 பாடலின் பொருள் இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அணிப்பொருத்தம்:
இக்குறளில் அன்பும் அறனும் என்ற
சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும்
பயனும் என்ற சொற்களை முறைபடக்
கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி
ஆகும்.
10).தற்குறிப்பேற்ற அணி இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா. ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங் கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பாடலின் பொருள் கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.
தற்குறிப்பேற்ற அணி ✓ ️
தற்குறிப்பேற்ற அணி அணிப்பொருத்தம் : கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த
கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘ இம்மதுரைக்குள் வரவேண்டா ’ எ ன் று
தெரிவிப்பது போலக் கா ற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும்..
11) தன்மையணி எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின்
மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். இவ்வணி நான்கு வகைப்படும். பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்
தன்மையணி என்பனவாகும்.
எ.கா.
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்
.
சிலம்பு - வழக்குரை காதை வெண்பா
பாடலின் பொருள் :
உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த
கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச்
சிலம்போடு வந்த தோற்றமும் அவளது
கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி
பாயும் கூடல் நகர த்து அரசனான பாண்டியன்
தோற்றான். அவளது சொல், தன் செவியில்
கேட்டவுடன் உயிரை நீத்தான்.
தன்மையணி ✓ ️
அணிப்பொருத்தம் கண்ண கியின் துயர் நிறைந்த
தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.
“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்“
தன்மையணி
பாடச்சுருக்கம்.
1) To acquaint ourselves about the political and economic developments after World War I which ultimately led to World War II
2) To understand the course of the War, in general; in particular, to learn the main events which were turning points in the War
3) To know the effects of World War II
4) To understand the “holocaust”, and the mass killing of Jews in Nazi
5) To acquire knowledge about the international organisations established after the World War
6) The War lasted from 1939 till 1945 and was fought in almost every part of the world, in Europe, Africa and the Asia Pacific. The Allies, initially Britain and France, and subsequently the USSR (Russia) and the United States, fought against the Axis powers - Germany, Italy and Japan.
7) Initially both the German army in Europe and Japan in the East were very successful. However, after the United States with its enormous resources also joined the Allies, both Germany and Japan were defeated after many prolonged fighting.
8) The post-War world saw the rise of two superpowers, namely the United States and the USSR. Both countries were in an arms race, especially to build their nuclear weapons.
1) முதல் உலகப்போருக்கு பிந்தைய அரசியல் , பொருளாதர வளர்ச்சிகளை அறிமுகப்படுத்திகொள்ளுதல் அவையே இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச்சென்றதை அறிந்து கொள்ளுதல்.
2) பொதுவாகப் போரின் போக்கை அறிந்து கொள்ளுதல். குறிப்பாக போரின் திருப்புமுனைகளாய் அமைந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல்.
3) இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை அறிந்து கொள்ளுதல்.
4) போரழிவு (Holocaust) என்பதையும், நாசிச ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதையும் புரிந்துகொள்ளுதல்.
5) இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஒரு பன்னடாட்டு அமைப்பு முறையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த அறிவைப் பெறுதல்.
6) இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக் என ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இப்போர் ே டைபெற்றது. தொடக்கத்தில் பிரிட்டன், பிரான்சு, பின்னர்சோவிே த் யூனியன், அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ஆகியோரைக்கொண்ட நேசநாடுகள் அணி அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய கு எதிராகப் போரிட்டன.
7) தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஜெர்மனியும் கிழக்குப்பகுதிகளில் ஜப்பானும் பல வெற்றிகளைப் பெற்றன. இருந்தபோதிலும் அமெரிக்கா தனது மாபெரும் வளங்களுடன் நேசநாடுகள் அணியில் சேர்ந்த பின்னர் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும பல நீண்ட சண்டைக்குப் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
8) போருக்குப் பிந்தைய உலகம், அமெரிக்க ஐக் நாடுகள், ஐக்கிய சோவியத் சோசலிஸக் குடியரசுகள் என்றழைக்கப்பட்ட இரு வல்லரசுகளின் எழுச்சியைக் கண்ணுற்றது. இரு நாடுகளும் ஆயுதப்பெருக்கக் குறிப்பாக, அணு ஆயுதப் பெருக்கப் போட்டிகளில் ஈடுபட்டன.
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Unit I-கோடிட்ட இடங்களை நிரப்பு
1) இராணுவ நீக்கம் செய்யப்பட்ட . . . . . . . . . . . . . . . . . . . . பகுதியை ஹிட்லர் தாக்கினார்
1) Hitler attacked . . . . . . . . . . which was a demilitarised zone.
ரைன்லாந்தை
ரைன்லாந்தை ✓
இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ரைன்லாந்தை பகுதியை ஹிட்லர் தாக்கினார்
2).இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என அழைக்கப்பட்டது.
2)The alliance between Italy, Germany and Japan is known as . . . . . . . . . . .
மூவர் ஒப்பந்தம்
மூவர் ஒப்பந்தம் ✓
2) இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் மூவர் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
2) The alliance between Italy, Germany and Japan is known as . . . . . . .
3). . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
3). . . . . . . . . . . . . is a device used to find out the enemy aircraft from a distance.
ரேடார் - Rador
ரேடார் - Rador ✓
ரேடார் என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
2)Rador is a device used to find out the enemy aircraft from a distance.
4) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது..
1802 , 1911, 1908 , 1902
1902 ✓
1902ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
5) பால்கனில் . . . . . . . . . . . . . . . . . . நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
சிந்தூ, இந்தியா, மாசிடோனியா, பிரன்ஸ்
மாசிடோனியா ✓
பால்கனில் மாசிடோனியா நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
6) சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் . . . . . . . . . . . . . . . . . .
பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
பெர்டினன்ட் லாஸ்ஸல்லி ✓
சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
7) நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் . . . . . . . . . . . . ஆவார்
கிளமெண்சோ. ஜோசப் கோயாபெல்ஸ், லிங்கன், ஜான் கென்னடி
ஜோசப் கோயாபெல்ஸ் ✓ ️
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ஜோசப் கோயாபெல்ஸ் ஆவார்
8) வியட்நாம் தேசியவாதிகள் கட்சி . . . . . . . . . . ஆண்டில் நிறுவப்பட்டது.
1917, 1927, 1919, 1906
1927 ✓ ️
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி . 1927 ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது.
9) நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை . . . . . . . . . . . . . என அழைக்கப்பட்டது.
கெஸ்டோபோ
கெஸ்டோபோ ✓ ️
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை .கெஸ்டோபோ என அழைக்கப்பட்டது.
10) தென்னாப்பிரிக்க ஒன்றியம் . . . . . . . . . . . ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
1910
1910 ✓ ️
தென்னாப்பிரிக்க ஒன்றியம் 1910 ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
11). ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரன நெல்சன் மண்டேலா . . . . . . . . . . . . . . . . . . . ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
27, 50, 30 , 40
27 ✓ ️
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரன நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
12) i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் எற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
a) i) ii) ஆகியவை சரி,
b) iii) ஆகியவை சரியானது,
c) iii, iv சரியானது
d) i, ii, iii ஆகியவை சரி.
d) i, ii, iii ஆகியவை சரி. ✓ ️
13).கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.
a) கூற்று, காரணம் இரண்டுமே சரி,
b) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
d) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருத்தப்பாடாக இல்லை.
b) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. ✓ ️
14).கூற்று: கூற்று: 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிதது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
a) கூற்று, காரணம் இரண்டுமே சரி,
b) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.
c) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
d) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருத்தப்பாடாக இல்லை.
a)கூற்று, காரணம் இரண்டுமே சரி ✓ ️
15). பொருத்துக :
1. டிரான்ஸ்வால் -- ஜெர்மனி
2. டோங்கிங் -- ஹிட்லர்
3.ஹின்டன்பர்க் -- இத்தாலி
4. மூன்றாம் ரெய்க் -- தங்கம்
5.மாட்டியோட்டி -- கொரில்லா நடவடிக்கைகள்
1. டிரான்ஸ்வால் -- >தங்கம் ✓ ️
2. டோங்கிங் -- > கொரில்லா நடவடிக்கைகள் ✓ ️
3.ஹின்டன்பர்க் -- > ஜெர்மனி ✓ ️
4. மூன்றாம் ரெய்க் -- >ஹிட்லர் ✓ ️
5.மாட்டியோட்டி -- > இத்தாலி ✓ ️
16). பொருத்துக :
1. பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன் படிக்கை -- வெர்செய்ல்ஸ்
2. ஜிங்கோயிசம் -- துருக்கி
3. கமல் பாட்சா -- ரஷ்யாவும் - ஜெர்மனியும்
4. எம்டன் -- இங்கிலாந்து.
5. கண்ணாடி மாளிகை-- சென்னை
1. பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன் படிக்கை -- ரஷ்யாவும் - ஜெர்மனியும் ✓ ️
2. ஜிங்கோயிசம் -- இங்கிலாந்து. ✓ ️
3. கமல் பாட்சா -- துருக்கி ✓ ️
4. எம்டன் -- சென்னை ✓ ️
5. கண்ணாடி மாளிகை-- வெர்செய்ல்ஸ் ✓
17). i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது..
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
a) i), ii) ஆகியன சரி,
b) i, iii ஆகியன சரி
c)iv சரி
d) i, ii, iv ஆகியன சரி
d) i, ii, iv ஆகியன சரி ✓ ️
தங்களின் பதில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன !
Error!
Comments
Post a Comment