Click here to View
எங்கள் பாரதி -2
- Get link
- X
- Other Apps
பாடச்சுருக்கம்.
படித்துச் சுவைக்க : முளிதயிர் பிசைந்த சோற்றை உருட்டி அனைவருக்கும் கையில் ஓர் உருண்டை கொடுத்து, உருண்டையின் நடுவில் வைத்த குழியில் புளிக்குழம்பு இட்டு உண்ணச் சொன்ன அன்னை யின் அன்பில் தொடங்குகிறது அனைவருடனான பகிர்ந்துண்ணல்.
சிறு வயதில் மகனுடனோ மகளுடனோ வரும் நண்பர்களுக்கும் சேர்த்து அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல். தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அறவுணர்வும் தமிழர் மரபும் திருவள்ளுவர் இல்லறவியலில் 'விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே ' அமைத்திருக்கிறார் ;
இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “ மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
தனித்து உண்ணார்
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்யதோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத்
தமிழர் உணடலும் இலரே....
- புறநானூறு, 182 என்று கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி குறிப்பிட்டுள்ளார்.
திணைவழுவமைதி : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்தியக் கொள்ளபட்டது.
பால் வழுவமைதி : “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது
பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
இட வழுவமைதி : மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,“இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் ” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
கால வழுவமைதி : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும்.
அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
மரபு வழுவமைதி : “கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்”- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில்
கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக்
கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு
வழுவமைதிய ஏற்றுக் கொள்ளபட்டது.
விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோ டு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
சார்பெழுத்து : உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை , ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் , மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய இரண்டு அளபெடைகள் குறித்து இங்குக் காண்போம். அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல். பேச்சு வழக்கில் சொற்களை நீட் டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது. எ. கா. அம்மாஅ, தம்பீஇ
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Unit I-கோடிட்ட இடங்களை நிரப்பு
1) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு
நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
இ - கு (பறவை யிடம் இருப்பது)
கு - தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா - (மன்னரிடம் இருப்பது)
அ - கா (தங்கைக்கு மூத்தவள்)
ம - (அறிவின் மறுபெயர்)
பட- (நீரில் செல்வது)
இறகு, குருதி, வாள், அக்கா, மதி, படகு
இறகு, குருதி, வாள், அக்கா, மதி, படகு ✓
2) தேங்காயிலிருந்தது எண்ணெய் எடுத்த பிறகு மிஞ்சும் பொருளை குறிக்கும் சரியான சொல்.
கசடு, பிண்ணாக்கு, சருகு , சண்டு
பிண்ணாக்கு ✓
தேங்காயிலிருந்தது எண்ணெய் எடுத்த பிறகு மிஞ்சும் பொருளை குறிக்கும் சரியான சொல்பிண்ணாக்கு
3) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது.?
கூவிளம் தேமா மலர் , கூவிளம் புளிமா நாள், தேமா புளிமா காசு , புளிமா தேமா காசு
கூவிளம் தேமா மலர் ✓
எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு கூவிளம் தேமா மலர்
4) பின்வருவனவற்றுள் முறையான தொடர் . . . . . . . . . . . . .
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு,
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு,
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு,
ஈ) தமிழர் வாழை பண்பா ட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு, ✓
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு முறையான தொடர்
5) மேல்நிலை வகுப்பு - சேர்க்கை விண்ணப்பம்
| விபரம் | ||||
|---|---|---|---|---|
| மாணவ/மாணவியின் பெயர் | மு.சபரிஸ்வரன் | |||
| பிறந்த நாள் | ஆவணி 18 | |||
| தேசிய இனம் | இந்தியன் | |||
| பெற்றோர் - பதுகாவலர் பெயர் | ஜெயசெல்வி முருகேசன் | |||
| இறுதியாக படித்து முடித்த வகுப்பு | பத்தாம் வகுப்பு | |||
| பயின்ற மொழிகள் | தமிழ் - ஆங்கிலம் | |||
| பெற்ற மதிப்பெண் விழுக்காடு | 80 % | |||
| இறுதியாக படித்த பள்ளியின் பெயர் | அரசு மேல்நிலைப்பள்ளி- சீவநல்லூர் | |||
| தேர்வின் பெயர் | பதிவு எண் | ஆண்டு | பாடம் | மதிப்பெண் |
| பத்து-அரசு தேர்வு | 10234323 | 2021 | தமிழ் | 100 |
| ஆங்கிலம் | 100 | |||
| கணிதம் | 100 | |||
| அறிவியல் | 100 | |||
| சமூக அறிவியல் | 100 | |||
| மொத்தம் | 500 | |||
| மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? | ஆம் | |||
| சேர விரும்பும் பாட்பிரிவு | -- |
✓
6) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்காரணமாக அமைவது –
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
அ) வேற்றுமை உருபு ✓ ️
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்காரணமாக அமைவது வேற்றுமை உருபு
7) 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்ட தால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தா ன் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து
போற்றிய நிலை –
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
இன்மையிலும் விருந்து ✓ ️
'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்ட தால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை இன்மையிலும் விருந்து
8) "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ) உவமை, எதுகை
மோனை, எதுகை ✓ ️
"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? மோனை, எதுகை
9) குளிர் காலத்தை பொழுதாகக் கொண்ட நிலங்கள்?
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
பாலை, குறிஞ்சி, நெய்தல் நிலங்கள்
மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்கள்
மருதம், பாலை, நெய்தல் நிலங்கள்
மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்கள் ✓ ️
குளிர் காலத்தை பொழுதாகக் கொண்ட மருதம், குறிஞ்சி, நெய்தல்
நிலங்கள்
பெரும்பொழுது-கால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள்
| காலங்கள் | மாத எல்கை | மாத எல்கை |
|---|---|---|
| இளவேனில் | சித்திரை | வைகாசி |
| முதுவேனில் | ஆனி | ஆடி |
| கார்காலம் | ஆவணி | புரட்டாசி |
| கூதிர் (குளிர்காலம்) | ஐப்பசி | கார்த்திகை |
| முன்பனி | மார்கழி | தை |
| பின்பனி | மாசி | பங்குனி |
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
| நிலங்கள் | திணை வகை |
|---|---|
| மலையும் மலை சார்ந்த இடம் | குறிஞ்சித் திணை |
| காடும்,காடு சார்ந்த நிலமும் | முல்லைத் திணை |
| குறிஞ்சி , முல்லை இவை இரண்டிற்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் | பாலை எனப்பட்டது |
| வயலும் வயல் சார்ந்த நிலம் | மருதம் என வகைப்பட்டது, |
| கடலும் கடல் சார்ந்த இடம் | நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன. |
10).முல்லை நிலத்தின் பெரும் பொழுது.
குளிர்காலம்
கார்காலம்
இளவேனில்
கோடைகாலம்
கார்காலம் ✓ ️
முல்லை நிலத்தின் பெரும் பொழுது கார்காலம் அகும்.
11) முக்காலத்திற்கும் பொருந்தும்படி வருவது.
உம்மைத்தொகை.
வினைத்தொகை.
வேற்றுமைத்தொகை.
பண்புத்தொகை.
பண்புத்தொகை ✓ ️
முக்காலத்திற்கும் பொருந்தும்படி வருவது.பண்புத்தொகை ஆகும்.
பாடச்சுருக்கம்.
1) India has always been known as a peace – loving country and has strived hard to champion the cause of peace in the world.
2) India has cordial, historical, religious, economic, ethnic and linguistic relationship with all its neighbouring countries.
3) India supports its neighbours to improve public health, small scale industries, telecommunication, education and in the construction of roads and bridges,
4) Government of India provides grant assistance for the construction of buildings, laboratories, dispensaries and deep tube wells to its neighbours.
5) India is contributing proactively to the development of its neighbours in the form of monetary aids and funds.
6) India has good relationship with the superpowers and tries to reap the maximum benefit for its domestic development.
7) India extend it support to the UNO in all her efforts.
8) India is an active member of BRICS and it paves way for India to build its global profile.
1 இந்தியா எப்பொழுதும் அமைதியை விரும்பும் நாடாக இருப்பதோடு உலக அமைதிக் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது.
2 இந்தியா அதன் அனைத்து அண்டை நாடுகளுடன் வரலாற்று ரீதியாகவும், சமூக-பொருளாதார, இனம் மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டுள்ளது.
3 பொது சுகாதாரம், சிறு அளவிலான தொழில்கள், தொலைதததா டர்பு, கல்வி போன்றவற்றை மேம்படுத் தற்கும் மற்றும் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கும் அண்டை நாடுகளுக்கு உதவுகிறது.
4 ஆய்வகக் கட்டங்கள், மருந்தகங்கள், ஆழ் குழாய் கிணறுகள் போன்றவைகளை அமைத்திட அண்டை நாடுகளுக் பெரும் நிதி உதவி செய்கிறது.
5 இந்தியா தன் அண்டை நாடுகளின் வளர்ச்சிக் பண உதவி மற்றும் நிதி உதவி ஆகியவற்றை தன் பங்களிப்பாக முன்கூட்டியே செய்கிறது.
6 இந்தியா வல்லரசுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. மேலும் தன் உள்நாட்டு வளர்ச்சிக்கான அதிகபலன் நலனைப் பெற முயன்று வருகிறது.
7 ஐ.நா. சபையின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தன் ஒத்துழைப்பை நல்குகிறது.
8 பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப் இந்தியா ஒரு தீவிர உறுப்பினராக இருப்பதால் உலக அளவில் தன்னை வடிவமைக்கவும் இது வடிகோலுகிறது.
இந்திய மற்றும் அதன் அண்டை நாடுகள்
இந்தியாவின் சர்வதேச உறவுகள் :
கலைச் சொற்கள்:
ஓரினத்தைச் சேர்ந்த - homogenous - of the same kind/alike
இருதரப்பு வர்த்தகம் - bilateral - trade trading between two countries
நீர் மின்சார திட்டம் - hydroelectric project - producing electricity by using the power of fast moving water
உள்கட்டமைப்பு - infrastructure - the basis organisational facilities
தொன்மை - antiquity- the ancient past
இரண்டாகப் பிரித்தல் - bifurcation -to divide into two parts
கண்காணிப்பு surveillance - Close observation
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Unit I-கோடிட்ட இடங்களை நிரப்பு
1) . . . . . . . . . . . . . . . . . இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும்.
1) . . . . . . . . . . . . . . . . . is a small Himalayan kingdom.
பூட்டான் - Bhuthan
பூட்டான் - Bhuthan ✓
பூட்டான் இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும்.
Bhutan is a small Himalayan kingdom.
2).இந்தியா , தென்கிழக்காசியாவிற்கும் செல்வதற்கான ஒரு நுழைவாயிலாக . . . . . . . . . . . . . . . . இருக்கிறது.
2)India’s gateway to South East Asia is . . . . . . . . .
மியான்மர் - Myanmar
மியான்மர் - Myanmar ✓
இந்தியா , தென்கிழக்காசியாவிற்கும் செல்வதற்கான ஒரு நுழைவாயிலாக . மியான்மர் இருக்கிறது.
2) India’s gateway to South East Asia is Myanmar
3) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்பட்ட நாடு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆகும்.
3). . . . . . . is a buffer country between India and China.
நேபாளம் - Nepal
நேபாளம் ✓
3) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்பட்ட நாடு நேபாளம் ஆகும்.
3)Nepal is a buffer country between India and China
4) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது..
1802 , 1911, 1908 , 1902
1902 ✓
1902ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
5) இந்தியாவிற்கு சொந்தமான . . . . . . . . . . என்ற பகுதி மேற்கு வங்காளம் , வங்காள தேசம் எல்லையில் அமைந்துள்ளது.
5) A strip of land . . . . . . . . . . , belongs to India on West Bengal and Bangladesh border.
டீன்பிகா
டீன்பிகா ✓
இந்தியாவிற்கு சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்காளம் , வங்காள தேசம் எல்லையில் அமைந்துள்ளது.
6) இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு . . . . . . . . . . . . . . . . . . ஆகும்
6) . . . . . . . is known as the Land of thunderbolt.
பூட்டான்-Bhutan
பூ்ட்டான்-Bhutan ✓
இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு பூட்டான் ஆகும்.
6) Bhutan is known as the Land of thunderbolt.
7) . . . . . . . . . . . . ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.
7) India and Sri Lanka are separated by . . . . . . . . .
பாக் ஜலசந்தி- Palk Strait
பாக் ஜலசந்தி ✓ ️
7) பாக் ஜலசந்தி ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.
7) India and Sri Lanka are separated by Palk Strait
8) வியட்நாம் தேசியவாதிகள் கட்சி . . . . . . . . . . ஆண்டில் நிறுவப்பட்டது.
1917, 1927, 1919, 1906
1927 ✓ ️
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி . 1927 ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது.
9) நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை . . . . . . . . . . . . . என அழைக்கப்பட்டது.
கெஸ்டோபோ
கெஸ்டோபோ ✓ ️
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை .கெஸ்டோபோ என அழைக்கப்பட்டது.
10) தென்னாப்பிரிக்க ஒன்றியம் . . . . . . . . . . . ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
1910
1910 ✓ ️
தென்னாப்பிரிக்க ஒன்றியம் 1910 ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
11). ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரன நெல்சன் மண்டேலா . . . . . . . . . . . . . . . . . . . ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
27, 50, 30 , 40
27 ✓ ️
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரன நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
12) i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் எற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
a) i) ii) ஆகியவை சரி,
b) iii) ஆகியவை சரியானது,
c) iii, iv சரியானது
d) i, ii, iii ஆகியவை சரி.
d) i, ii, iii ஆகியவை சரி. ✓ ️
13).கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.
a) கூற்று, காரணம் இரண்டுமே சரி,
b) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
d) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருத்தப்பாடாக இல்லை.
b) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. ✓ ️
14).கூற்று: கூற்று: 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிதது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
a) கூற்று, காரணம் இரண்டுமே சரி,
b) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.
c) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
d) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருத்தப்பாடாக இல்லை.
a)கூற்று, காரணம் இரண்டுமே சரி ✓ ️
15). பொருத்துக :
1. டிரான்ஸ்வால் -- ஜெர்மனி
2. டோங்கிங் -- ஹிட்லர்
3.ஹின்டன்பர்க் -- இத்தாலி
4. மூன்றாம் ரெய்க் -- தங்கம்
5.மாட்டியோட்டி -- கொரில்லா நடவடிக்கைகள்
1. டிரான்ஸ்வால் -- >தங்கம் ✓ ️
2. டோங்கிங் -- > கொரில்லா நடவடிக்கைகள் ✓ ️
3.ஹின்டன்பர்க் -- > ஜெர்மனி ✓ ️
4. மூன்றாம் ரெய்க் -- >ஹிட்லர் ✓ ️
5.மாட்டியோட்டி -- > இத்தாலி ✓ ️
16). பொருத்துக :
1. பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன் படிக்கை -- வெர்செய்ல்ஸ்
2. ஜிங்கோயிசம் -- துருக்கி
3. கமல் பாட்சா -- ரஷ்யாவும் - ஜெர்மனியும்
4. எம்டன் -- இங்கிலாந்து.
5. கண்ணாடி மாளிகை-- சென்னை
1. பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன் படிக்கை -- ரஷ்யாவும் - ஜெர்மனியும் ✓ ️
2. ஜிங்கோயிசம் -- இங்கிலாந்து. ✓ ️
3. கமல் பாட்சா -- துருக்கி ✓ ️
4. எம்டன் -- சென்னை ✓ ️
5. கண்ணாடி மாளிகை-- வெர்செய்ல்ஸ் ✓
17). i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது..
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
a) i), ii) ஆகியன சரி,
b) i, iii ஆகியன சரி
c)iv சரி
d) i, ii, iv ஆகியன சரி
d) i, ii, iv ஆகியன சரி ✓ ️
Select any Options
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment