Click here to View
10-ம் வகுப்பு தமிழ்- சமூக அறிவியல் Part-I
- Get link
- X
- Other Apps
பாடச்சுருக்கம்.
1) முதலாளித்துவ நாடுகளின் வளர்ந்துகொண்டேயிருந்த, கச்சாப் பொருட்களுக்கும் சந்தைக்குமானத் தேவைகள் எவ்வாறு காலனியாதிக்கப் போட்டிக்கு இட்டுச்சென்றதென்பதும் அதன் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட மோதல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.
2) ஆசியாவில் ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்றது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
3) ஐரோப்பா இரு போர்முகாம்களாகப் பிரிந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட அணி சேர்க்கைகளும், எதிரணி சேர்க்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
4)முதல் உலகப்போர் வெடிப்பதற்குக் காரணங்களான வன்முறை வடிவங்களிலான தேசியம், ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை, அல்சேஸ், லொரைன் பகுதிகளை இழந்ததனால் பிரான்சுக்கு ஜெர்மனியோடு ஏற்பட்டப் பகைமை, பால்கன் பகுதியில் ஏற்பட்ட அதிகாரஅரசியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
5) நீர்மூழ்கிக்கப்பல் போரினை ஜெர்மன் தொடுத்ததைத் தொடர்ந்து போரில் அமெரிக்கா பங்கேற்றதும், நேசநாடுகள் பெற்ற இறுதி வெற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
6) பாரிஸ் அமைதிமாநாடும், வெர்செய்ல்ஸ்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
7) முதல் உலகப்போரின் பின்விளைவுகள், குறிப்பாக ரஷ்யப்புரட்சி, அதற்கான காரணங்கள், போக்கு, விளைவுகள் ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
8) உலகஅமைதிக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பான பன்னாட்டுச் சங்கமும் போர்களைத் தடுப்பதிலும் அமைதியை மேம்படுத்தியதிலும் அது வகித்தப் பங்கும் விமர்சன பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
9) அமைதிக்கான இவ்வமைப்பை உருவாக்கியவர்கள் தேசியவாதத்தின் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்திருக்கவில்லை. ‘கூட்டுப்பாதுகாப்பு’ எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.
10) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.
Section A-மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
Unit I-கோடிட்ட இடங்களை நிரப்பு
1) . . . . . . . . . . ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
1894, 1984, 1855, 1810
1894 ✓
1894 ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது️
2) . . . . . . . . . . . . . . . . . . ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
1902 , 1809, 1915, 1913
1913 ✓
1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
3) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது..
1802 , 1911, 1908 , 1902
1902 ✓
1902ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
4) பால்கனில் . . . . . . . . . . . . . . . . . . நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
சிந்தூ, இந்தியா, மாசிடோனியா, பிரன்ஸ்
மாசிடோனியா ✓
பால்கனில் மாசிடோனியா நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
5) டானென்பர்க் போரில் . . . . . . . . . . . . . . . . . . பேரிழப்புகளுக்கு உள்ளானது.
ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ்
ரஷ்யா ✓
டானென்பா்க் போரில் ரஷ்யா பேரிழப்புகளுக்கு உள்ளானது.
6) பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் . . . . . . . . . . . ஆவார்.
கிளமெண்சோ. சர்சில், லிங்கன், ஜான் கென்னடி
கிளமெண்சோ ✓ ️
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் கிளமெண்சோ ஆவார்
7) . . . . . . . . . . ஆம் ஆண்டில் இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது. .
1917, 1925, 1919, 1906
1906 ✓ ️
1906 ஆம் ஆண்டில் இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது.
8) . . . . . . . . . . ஆண்டு டிரபால்கேர் போர் நடைபெற்றது.
1805, 1810, 1835, 1818
1805 ✓ ️
1805 ஆண்டு டிரபால்கேர் போர் நடைபெற்றது.
9) முதல் உலகப் போர் . . . . . . . . . . சார்ந்த போர் ஆகும்.
தொழில்சாலைகள்,
தொழிற்சாலைகள் ✓ ️
முதல் உலகப்போர் தொழில்சாலைகள் சார்ந்த போர் ஆகும்.
10) இத்தாலியப்படை 1896 ஆம் ஆண்டு . . . . . . . . போர்களத்தில் எத்தியோப்பியாவுடன் போரிட்டது.
(அடோவா)
அடோவா ✓ ️
இத்தாலியப்படை 1896 ஆம் ஆண்டு அடோவாபோர்களத்தில் எத்தியோப்பியாவுடன் போரிட்டது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment